மின்கம்பத்தைஇடம் மாற்ற செய்ய லஞ்சம் - உதவி மின்பொறியாளர் கைது

Update: 2025-07-11 05:35 GMT

கிருஷ்ணகிரியில் மின்கம்பத்தை இடமாற்றம் செய்ய 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, உதவி மின் பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். இணக பீரனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கதிரப்பா என்பவர், குறைந்த மின்னழுத்த மின் கம்பத்தினை இடமாற்றம் செய்து, உயர் மின்னழுத்த மின் கம்பம் அமைக்க கோரி ஆன்லைனில் முறைப்படி விண்ணப்பித்து இருந்தார். இந்த நிலையில், அதற்காக உதவி மின் பொறியாளர் உதயகுமார் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, கேட்ட பணத்தை தந்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் உதயகுமாரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து, போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்