காவிரி ஆற்றுக்கு குளிக்கச் சென்ற கல்லூரி மாணவன், நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் பகுதியை சேர்ந்தவர் தர்ஷன். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் சேலத்தை சேர்ந்த நண்பரின் வீட்டிற்கு விடுமுறைக்காக வந்திருந்தார். அப்போது தனது நணபர்களுடன் எடப்பாடி பூலம்பாட்டி காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றபோது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி மாயமானார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், ஒரு மணி நேர தேடலுக்கு பின் தர்ஷனின் உயிரற்ற உடலை மீட்டனர்