திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கத்தரிக்காய் தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த எட்டு பேரை தேனீக்கள் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. லால்குடி அருகே உள்ள கூகூரை சேர்ந்த பாலாஜி என்பவரது தோட்டத்தில் சிலர் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, கத்திரிக்காய் செடியில் இருந்த தேனீக்கள் கலைந்து, 8 பேரை துரத்தி துரத்தி கொட்டியுள்ளது. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது, மூதாட்டிகளின் புடவையில் தஞ்சமடைந்த தேனீக்கள் சிதறி பறந்ததால் மருத்துவமனையில் இருந்த நோயாளிகளும் பொதுமக்களும் பதறியடித்து ஓடியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.