கருணாநிதியின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு பீச் கிரிக்கெட் போட்டி - கோவளம் அணி சாம்பியன்

Update: 2025-06-01 08:22 GMT

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த கோவளம் ஊராட்சியில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு, பீச் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் சோபனா தங்கம் சுந்தர் ஏற்பாட்டின்பேரில்

27 நாட்களாக நடைபெற்ற இப்போட்டியில், திருப்போரூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் 274 அணிகள் பங்கேற்றன. இரண்டாம் ஆண்டாக எஸ்.டி. எஸ் பவுண்டேஷன் நிறுவனத் தலைவர் சுந்தர் தலைமையில் நடைபெற்றது. பீச் கிரிக்கெட் இறுதிச் சுற்று ஆட்டத்தை, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், திருப்போரூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் இதயவர்மன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு டாஸ் போட்டு தொடங்கி வைத்தனர். முதலில் பேட் செய்த கானத்தூர் ரெட்டி குப்பம் அணியினர், 5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய கோவளம் அணியினர், 4 ஓவர்கள் முடிவில், 3 விக்கேட்டுக்கு 65 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். முதல் பரிசாக, 2 லட்சத்து 101 ரூபாயும், 2ம் பரிசாக 1 லட்சத்து 101 ரூபாயும் வழங்கப்பட்டன. இதனிடையே, விளையாட்டு திடலில் நடனமாடிய அனைத்து சிறுவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் ஊக்கப் பரிசு வழங்கப்பட்டது.

மொத்தத்தில், ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி போன்று சியர் கேர்ல்ஸ் நடனம், டி.ஜே, கமென்டரி, யூடியூப்பில் நேரலை மற்றும்

எல்இடி திரையரங்கு மூலம் கிரிக்கெட் போட்டி காட்சிப்படுத்தப்பட்டது போன்றவை விளையாட்டு வீரர்கள் மற்றும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

Tags:    

மேலும் செய்திகள்