முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு பீச் கிரிக்கெட் போட்டி
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு பீச் கிரிக்கெட் போட்டி
செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் பீச் கிரிக்கெட் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடற்கரைப் பகுதியில் கோவளம் ஊராட்சி நிர்வாகம் மற்றும் எஸ்.டி.எஸ். ஃபவுண்டேஷன் சார்பில் இன்று முதல் ஜூன் 1ம் தேதி வரை இந்த போட்டி நடைபெறவுள்ளது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 275 அணிகள் இந்த கிரிக்கெட் தொடரில் பங்கேற்கின்றன. முன்னதாக பேனா நினைவுச் சின்னத்தின் மாதிரி ஆழ்கடலில் இருந்து கொண்டு வரப்பட்டது.