அவிநாசி இரட்டை கொ*ல | "100% அவன் தான்... " - உறவினர்கள் பகீர் தகவல் | Avinashi | Murder Mystery

Update: 2025-03-13 15:50 GMT

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வயதான தம்பதியனர் கொலை வழக்கில், போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. பழனிசாமி-பர்வதம் தம்பதியர் வீட்டிற்கு பக்கத்து தோட்டத்தில் வசிக்கும் உறவினரான ரமேஷ்-க்கும், பழனிச்சாமி குடும்பத்திற்கும் இடையே, ஆடு மற்றும் கோழிகள் வேலி தாண்டி வருவது தொடர்பாக பல மாதங்களாக பிரச்சனை இருந்து வந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சண்டை ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த ரமேஷ் வீடு புகுந்து இருவரையும் வெட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடியதாக கூறப்படுகிறது. அவிநாசி நோக்கி சென்றபோது விபத்தில் சிக்கி அரசு மருத்துவமனையில் ரமேஷ் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரிடம் விசாரணை நடத்த போலீசார் விரைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்