``காண்ட்ராக்டை மீறி மண் எடுத்ததால் அந்தரத்தில் தொங்கும் அடுக்குமாடி வீடுகள்''
குமரி மாவட்டம் அருமனை நெடுங்குளத்தில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மண் அள்ளப்பட்டதால், அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. ஒப்பந்ததாரர்கள் சட்ட விரோதமாக மண்ணை விற்பனை செய்துள்ளதாகவும், தொடர் மழையால் மண் சரிவு ஏற்படுவதாகவும் குடியிருப்புவாசிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக பக்கச்சுவர் கட்டி, குடியிருப்புகளைப் பாதுகாக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.