அண்ணா பிறந்தநாள்- முன்னாள் மேயர் சைதை துரைசாமி மரியாதை

Update: 2025-09-15 12:21 GMT

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 117-ஆவது பிறந்த நாளை ஒட்டி, அவரது உருவப்படத்துக்கு சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அண்ணா பிறந்த நாளை அரசியல் கட்சியினர் சிறப்பாக கொண்டாடினர். இதையொட்டி, சென்னை சிஐடி நகரில் உள்ள தனது இல்லத்தில் அண்ணா உருவ படத்துக்கு முன்னாள் மேயரும், அதிமுக மூத்த தலைவருமான சைதை துரைசாமி மரியாதை செலுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்