கோழி விரட்டியதால் கடும் கோபம் - "மாணவன் மீது அரிவாள் வீசிய அதிர்ச்சி"
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் கோழி விரட்டுவதில் ஏற்பட்ட தகராறில் மாணவனை அரிவாளால் தாக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மைலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனி மகன் லட்சுமணன். 9ம் வகுப்பு படித்து வரும் இவர் தனது விவசாய நிலத்தில் வேலை செய்து வந்தார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த மூர்த்தி என்பவரது கோழிகள், தனது தோட்டத்தில் புகுந்ததால் அதனை லட்சுமணன் விரட்டியுள்ளார் . இதில் ஆத்திரமடைந்த மூர்த்தி தான் வைத்திருந்த அரிவாளை எரிந்து லட்சுமணனை தாக்க முயற்சித்துள்ளார். இதில் லட்சுமணன் அதிர்ஷ்டவசமாக தப்பிய நிலையில், தன்னை தாக்க வீசிய அரிவாளை எடுத்து வந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்...