சர்ப்ரைஸ் கொடுத்த அன்புமணி மகள்... "அம்மா... நீங்களா..." - ஷாக்கான ஆன்மீக சொற்பொழிவாளர்

Update: 2025-05-25 04:18 GMT

திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த அன்புமணி மகள்... "அம்மா... நீங்களா..." - ஷாக்கான ஆன்மீக சொற்பொழிவாளர்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அருகே மேல பட்டில் பாமக அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி தனது சொந்த கிராமத்தில் உள்ள கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தந்தார்... விழாவில் ஆன்மீக சொற்பொழிவாளர் ஆற்றிய உரையை பாராட்டி 5 ஆயிரத்து ஒரு ரூபாய் அன்பளிப்பு அளித்துள்ளார். இதை

சௌமியா அன்புமணியின் மகள் சஞ்சுத்ரா வழங்கினார்.

இதனை சற்றும் எதிர்பாராமல் அதிர்ச்சி அடைந்த ஆன்மீக சொற்பொழிவாளர், அன்பளிப்பு வழங்கியது அன்புமணி மகள் என்பதை அறிந்து சுதாரித்துக் கொண்டு பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணியின் புகழ்பாடி வாழ்த்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்