Ambedkar Statue Issue | நடிகர் சாய்தீனாவும் போலீசாரும் வாக்குவாதம்.. பரபரப்பான திருவொற்றியூர்
சென்னை திருவொற்றியூரில் காவலருடன் திரைப்பட நடிகர் சாய்தீனா மற்றும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டோல்கேட் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலையை சுற்றி, நடைபெறும் கட்டுமான பணியை நிறுத்த காவலர் ஆய்வாளர் உத்தரவிட்டார். இதை பற்றி பேசுவதற்காக நடிகர் சாய்தீனா மற்றும் சமூக ஆர்வலர்கள் காவல் நிலையம் சென்றுள்ளனர். காவல் ஆய்வாளர் நீதிமன்றத்தில் இருப்பதாக தெரிவித்த நிலையில், நீண்ட நேரம் காத்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிலை முன் அனைவரும் கூடிய நிலையில், பேச்சுவார்த்தை நடத்திய காவலருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.