அஜித்குமார் கொலை வழக்கு - மருத்துவர்களிடம் சிபிஐ விசாரணை
திருப்புவனம் அஜித்குமார் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, தனியார் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
திருப்புவனம் அஜித்குமார் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையின் 10வது நாளில் மடப்புரம் காளியம்மன் கோயில் ஊழியர்களான கண்ணன், கார்த்திக், கோவில் கண்காணிப்பாளர் பாஸ்கர் உள்ளிட்டோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.
இதில், சிசிடிவி காட்சி உள்ளிட்ட ஆதாரங்களுடன் ஆஜரான தனியார் மருத்துவமனை மருத்துவரிடமும், அரசு மருத்துவமனை மருத்துவர் உள்ளிட்டோரிடமும் சிபிஐ அதிகாரிகள் ஒரே நாளில் 8 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தினர்.