ஆவணி திருவிழா..தங்கமயில் வாகனத்தில் வீதி உலா வந்த சுப்பிரமணிய சுவாமி-குவிந்த பக்தர்கள்

Update: 2025-08-19 04:31 GMT

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா ஐந்தாம் நாளை முன்னிட்டு, குடைவரைவாயில் தீபாராதனையை தொடர்ந்து, சுப்பிரமணிய சுவாமியும், அம்பாளும் தனித்தனியே தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். கோவிலின் பிரதான வாயில் திறக்கப்படும் போது சுவாமி குமரவிடங்க பெருமான், அம்பாள் மற்றும் சுவாமி ஜெயந்திநாதர் ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் ஒரே நேரத்தில் மகா தீபாராதனை நடைபெறும். இந்த தீபாராதனை தான் குடைவரைவாயில் தீபாராதனை என்று அழைக்கப்படுகிறது. இந்த தீபாராதனை நடைபெற்றதை தொடர்ந்து, சுப்பிரமணிய சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்