திருப்பூரில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். இந்து அன்னையர் முன்னணி ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில் மஞ்சள் நீர், முளைப்பாரி ஆகியவற்றை ஊர்வலமாக எடுத்து வந்த பெண்கள் கோட்டை மாரியம்மன் மற்றும் கோட்டை ஈஸ்வரன் கோயிலில் அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். சிறப்பு அபிஷேகத்தில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.