இரவில் கேட்ட பயங்கர சத்தம்.. பேரன்களுடன் ரத்தம் தெறித்த நிலையில் கிடந்த தாத்தா
வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு- குண்டு வெடித்ததில் மூவர் காயம்
தேனி மாவட்டம் கம்பத்தில் வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது, குண்டு வெடித்ததில் இரண்டு சிறுவர்கள் உட்பட மூவர் படுகாயம் அடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கம்பம் ஜல்லிக்கட்டு தெருவை சேர்ந்த 67 வயதான குருநாதன் என்பவர், தனது பேர பிள்ளகளான 7 வயதான ரித்தீஷ் மற்றும் 5 வயதான அபிநவ் ஆகியோர் உடன் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி மயில் தாய் வெளியே சென்ற நிலையில் வீட்டிலிருந்து திடீரென வெடி சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது, குருநாதன் மற்றும் அவரது பேர பிள்ளைகள் ரத்த காயத்துடன் கிடந்துள்ளனர். உடனே அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் குருநாதன், வீட்டில் சட்ட விரோதமாக சிறிய அளவிலான நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்தது தெரிய வந்தது.