பிரபல நடிகர் போலவே நடித்து ரூ.20 லட்சம் லவட்டிய வடக்கு நபர் - உறைந்த ஊட்டி போலீஸ்

Update: 2025-06-17 05:38 GMT

நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பெயரில் ரூ.20 லட்சம் மோசடி செய்த அரியானா இளைஞர் கைது

இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் ஹோட்டல் மேலாளரிடம், அவரைப் போலவே மெசேஜ் அனுப்பி 20 லட்ச ரூபாய் மோசடி செய்த வழக்கில், அரியானாவை சேர்ந்த ரவீன்குமார் என்பவரை நீலகிரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம், மிதுன் சக்கரவர்த்தி பெயரில் உதகையில் உள்ள அவருடைய ஹோட்டல் மேலாளரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், சிக்னல் பிரச்சினை இருப்பதாகவும், ஹோட்டல் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை ஒரு குறிப்பிட்ட கணக்கிற்கு அனுப்புமாறும் கேட்டுள்ளனர். இதை நம்பிய மேலாளர், 20 லட்சத்தை ஆன்லைன் மூலம் அனுப்பி வைத்து விட்டு, மறுநாள் மிதுன் சக்கரவர்த்தியை தொடர்பு கொண்டபோதுதான் மோசடி வந்தது. இதுகுறித்து ஹோட்டல் மேலாளர் அளித்த புகாரின்பேரில் நீலகிரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து, அரியானாவை சேர்ந்த ரவீன்குமாரைக் கைது செய்து, அவரிடமிருந்து 6 லட்சத்து 95 ஆயிரம் ரூபாயை மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்