அடியாட்களுடன் வந்து வீட்டை தரைமட்டமாக்கிய கும்பல்.. ஆட்சியரிடம் கண்ணீர் வடித்த பெண்

Update: 2025-05-08 03:11 GMT

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே, உறவினர்கள் மற்றும் அடியாட்கள் ஆயுதங்களுடன் வந்து தங்களை தாக்கி, புல்டோசர் கொண்டு வீட்டை இடித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

மொளசி ஊராட்சி அம்மன் பச்சப்பாளி பகுதியைச் சேர்ந்த மறைந்த முதியவர் ராமசாமி என்பவர், தனது சொத்துக்களை 2வது மனைவியின் குடும்பத்தாருக்கு தெரியாமல், முதல் மனைவியின் மகன் தியாகு என்பவரது பெயருக்கு எழுதி வைத்ததாக கூறப்படுகிறது. அவர் தனது சகோதரியான சைலஜாவுக்கு விற்றுவிட்டதாக பத்திரம் பதிவு செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து 2வது மனைவியின் மகன் முத்து, நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து நிலுவையில் உள்ளது. இந்நிலையில், தியாகு உள்ளிட்ட உறவினர்கள், 40 அடியாட்களுடன் ஆயுதங்களால் தங்களை தாக்கி, வீட்டை தரைமட்டமாக்கியதாக பாதிக்கப்பட்ட முத்து மற்றும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உமாவிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்