காரைக்குடி ரயில் நிலையத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செஞ்சையை சேர்ந்த கணேசன், தனது மனைவியுடன் சென்னைக்கு செல்ல ஓட்டுநர் சரவணன் உடன் காரில் ரயில் நிலையத்திற்கு சென்ற போது நிகழ்ந்த இந்த விபத்தில் மூவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.