ஊருக்குள் நடமாடும் புலி "பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்புறது இல்ல.." - உயிர் பயத்தில் நீலகிரி மக்கள்
ஊருக்குள் நடமாடும் புலி "பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்புறது இல்ல.." - உயிர் பயத்தில் நீலகிரி மக்கள்
புலி நடமாட்டத்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர், நீலகிரி மாவட்டம் மாவனல்லா கிராமத்தில் அரசுப்பள்ளிக்கு அருகே புலி நடமாடியதால் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புவதை பெற்றோர் பலர் தவிர்த்துள்ளனர்.
மாவனல்லா கிராமத்தில் அவ்வப்போது உலா வரும் புலி ஒன்று, கடந்த மாதம் 24ஆம் தேதி ஒரு பெண்ணை தாக்கி கொலை செய்தது. இந்த புலியை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு இடங்களில் கூண்டு வைத்தும், புலி சிக்காமல் ஊருக்குள்ளேயே நடமாடி வருகிறது. சமீபத்தில் அப்பகுதியில் உள்ள பள்ளிக்கு அருகே இந்த புலி நடமாடியதால் அச்சமடைந்த பெற்றோர் பலர், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.