பள்ளிக் கழிவறையில் 1ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம் - ஆசிரியர் ரூபத்தில் காம மிருகம்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தனியார் பள்ளியில் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். இடைவேளையின் போது கழிவறைக்கு சென்ற ஒன்றாம் வகுப்பு மாணவியிடம் அதே பள்ளியில் பணியாற்றி வந்த முன்னாள் ராணுவ வீரரும், இந்தி ஆசிரியருமான சங்கர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சங்கரை கைது செய்து சிறையிலடைத்தனர்.