பெண் மீது கொடூர தாக்குதல் - வெளியான அதிர்ச்சி காட்சி
சிதம்பரம் அருகே, ஒரு பெண்ணை, மூன்று பெண்கள் சேர்ந்து தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள ஆதிவாகநல்லூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் புகழேந்தி. இவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வரும் நிலையில், ஏற்கனவே திருமணம் ஆன கலைச்செல்வி என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார் என கூறப்படுகிறது. இதற்கு புகழேந்தியின் பாட்டி ஜெயலக்ஷ்மி, அத்தைகள் கலாராணி, மர்லின் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், மூவரும் சேர்ந்து, கலைச்செல்வியை கட்டையால் தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த கலைச்செல்வி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.