கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அருகே, பள்ளிச் சிறுமி உயிரிழந்த சம்பவத்தில், ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கீழ் அழிஞ்சிப்பட்டு இருளர் குடியிருப்பை சேர்ந்தவர் கனகராஜ். இவரது 7 வயது மகள் பிரியதர்ஷினி, அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் பள்ளிக்கு சென்ற பிரியதர்ஷினி, திடீர் உடல் நலக்குறைவு காரணமாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படடார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில், உரிய நேரத்தில் சிறுமி பெற்றோர்களிடம் ஒப்படைக்கவில்லை எனவும், சிகிச்சை அளிக்கப்படவில்லை எனவும் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து, பணியில் இருந்த ஆசிரியை ரேவதி சஸ்பெண்ட் செய்யப்பட்டள்ளார். மற்றொரு ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.