ரூ.2.56 கோடி முறைகேடு - திமுக நிர்வாகி உட்பட 5 பேர் மீது வழக்கு

Update: 2025-08-25 02:53 GMT

ரூ.2.56 கோடி முறைகேடு - திமுக நிர்வாகி உட்பட 5 பேர் மீது வழக்கு

காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சியில் 2 கோடியே 56 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக திமுக நிர்வாகியான பாண்டியராஜன் என்பவர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சங்கராபுரம் ஊராட்சியின் அப்போதையை துணை தலைவராகவும், பொறுப்பு தலைவராகவும் பாண்டியராஜன் பதவி வகித்தார். 2020ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து, 2022ஆம் ஆண்டு டிசம்பர் வரை சாலைப்பணி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்தல் உள்ளிட்டவை என முறைகேடு செய்து 2 கோடியே 56 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் முறைகேடு செய்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது. தற்போது பாண்டியராஜன், ஊராட்சி செயலாளர் அண்ணாமலை, தற்போதைய மணமேல்பட்டி ஊராட்சி செயலாளர் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்