சென்னையில் 130 மின்சார பேருந்துகள் சேவை - தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

Update: 2025-05-31 03:54 GMT

சென்னையில் 130 மின்சார பேருந்துகளின் சேவையை தமிழ்நாடு முதலமைச்சர் ஜூன் 3ம் தேதி தொடங்கி வைக்கிறார். 2025ம் ஆண்டு இறுதிக்குள், சென்னை முழுவதும் மொத்தமாக 625 மின்சார பேருந்துகள் இயங்கும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

2023ம் ஆண்டு, ஜெர்மன் வங்கியின் நிதி உதவியுடன் 500 மின்சார பேருந்துகள் வாங்க டெண்டர் வெளியிடப்பட்ட நிலையில், சென்னைக்கான இரண்டாவது கட்ட திட்டத்தின் கீழ், கடந்த பிப்ரவரி மாதம் மேலும் 600 மின்சார தாழ்தள பேருந்துகளுக்கான டெண்டர் விடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சென்னையில் உள்ள 5 பணிமனைகளிலிருந்து ஜூன் 3ம் தேதி முதல் 130 மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்