விராட் கோலி ஓய்வு முடிவு பத்தி உருக்கமா ஒரு போஸ்ட் பகிர்ந்த மனைவி அனுஷ்கா சர்மா, எல்லோரும் உங்களோட சாதனை, மைல்கல் பத்திதான் பேசுவாங்க.. ஆனா நீங்கள் வெளியே காட்டிக்கொள்ளாத கண்ணீர் யாரும் பார்க்காத போராட்டம், கிரிக்கெட் மீதான காதல் எப்பவும் என் நினைவுல இருக்கும்னு சொல்லியிருக்காரு.
சச்சின் தெண்டுல்கரும் கோலிய பத்தி புகழ்ந்துட்டாரு. தன்னோட கடைசி டெஸ்ட் போட்டியப்ப அப்பாவுடையதுனு மறக்க முடியாத கிஃப்ட் கொடுத்ததா நினைவுகூர்ந்த சச்சின், எண்ணற்ற இளம் வீரர்கள் கிரிக்கெட் விளையாடுவதற்கு காரணமா ஜொலிக்குறதா கோலிய புகழ்ந்துட்டாரு.
கோலியோட பட்டப்பெயரான பிஸ்கோட்டினு கூப்பிட்டு செம்ம கெரியர்னு, தனக்கு உத்வேகமா இருந்ததாவும் டிவில்லியர்ஸ் புகழ்ந்துட்டாரு.
இவங்களை போல முன்னாள் இந்நாள் பிளேயர்ஸ் கோலியை வாழ்த்திட்டு வராங்க..
இதுஒருபக்கம்னா டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச், அற்புதமான கெரியர்னு கோலிய புகழ்ந்துட்டாரு...
கால்பந்து நட்சத்திரம் ஹாரி கேனும் கோலிக்கு ஹார்ட்டின் விட்ருக்காரு.
ஓய்வு முடிவுக்கு பிறகு மனைவியோட கோலி கூலா சுத்துன வீடியோவும் இணையத்துல கவனம் பெற்றுச்சி..