Vaibhav Suryavanshi | இந்தியாவின் மிக உயரிய விருதை பெற்ற இளம் கிரிக்கெட் நட்சத்திரம்

Update: 2025-12-26 13:23 GMT

இளம் கிரிக்கெட் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷிக்கு 'பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதை' குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கியுள்ளார்.

ஐந்து முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கான இந்தியாவின் மிக உயர்ந்த சிவில் விருதாக 'பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார்' விருது கருதப்படுகிறது. இது பல்வேறு துறைகளில் சிறந்த சாதனைகளுக்காக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு

விளையாட்டு பிரிவில்

மிக இளம் வயதிலேயே சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த கிரிக்கெட் வீரரான வைபவ் சூர்யவன்ஷிக்கு வழங்கப்பட்டுள்ளது. எதிர்கால இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரம் என்று பலராலும் குறிப்பிடப்படும் வைபவ் சூர்யவன்ஷி தனது 14வது வயதில் இந்த விருதை பெற்றுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்