Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (26.12.2025) | 7 PM Headlines | Thanthi TV

Update: 2025-12-26 13:51 GMT
  • தங்கம் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனையாகிறது... ஒரு கிராம் தங்கம் 12 ஆயிரத்து 890-க்கு விற்பனையாகிறது...
  • காங்கிரஸை போலவே திமுக-விலும் குழு அமைத்த பின்னர், தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.... ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் காந்தியின் பெயரை நீக்கியதன் மூலம், பாஜக அவரை இரண்டாவது முறையாக கொலை செய்துள்ளதாகவும் சிதம்பரம் சாடியுள்ளார்...
  • பாமகவில் இருந்து தன்னை நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை என்று ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்... கட்சியில் ராமதாசுக்கே அதிகாரம் உள்ளதாகவும் அவர் கூறினார்...
  • திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா, சந்தனக்கூடு விழாவிற்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது... மலை மீது ஆடு, கோழி பலியிட தடைகோரிய மனுவுக்கு, தர்கா நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது... 
  • சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி திரைப்படத்தின், கதை திருட்டு புகார் குறித்து தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...... படத்தை வெளியிட தடைகோரிய நிலையில், ஜனவரி 2ஆம் தேதி தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது...
  • புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.... போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், நேரக் கட்டுப்பாடு குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்