Train Incident | ரயில் சக்கரங்களுக்கு இடையே சிக்கிய பெண் | கடவுளாக வந்த CRPF வீரர்
ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண் - காப்பாற்றிய CRPF வீரர்
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ரயிலுக்கும், தண்டவாளத்திற்கும் இடையில் விழுந்த பெண்ணை, ரயில்வே பாதுகாப்புப் படை வீரர், கண் இமைக்கும் நேரத்தில் காப்பாற்றினார்.
விழுப்புரம் விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்த பிரமிளா, தனது இரண்டு குழந்தைகளுடன் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் நோக்கிச் செல்லும் ரயிலில் ஏற முயன்றபோது, ரயிலுக்கும், தண்டவாளத்துக்கும் இடையே தவறி விழுந்தார்.
உடனே, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த CRPF வீரர் தயாநிதி, விசிலை ஊதி ரயிலை நிறுத்தினார். இதனால் ரயிலின் சக்கரங்களுக்கு இடையில் சிக்கிய பிரமிளா மீட்கப்பட்டார்.
துரிதமாக செயல்பட்டு பெண்ணை காப்பாற்றிய CRPF வீரருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.