Chennai | Police | இடிக்க வந்த அதிகாரிகள்.. | போலீசாருடன் மக்கள் வாக்குவாதம் | சென்னையில் பரபரப்பு

Update: 2025-12-26 13:46 GMT

சென்னை மெளலிவாக்கத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசாருக்கும், கடை உரிமையாளர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மௌலிவாக்கம் மற்றும் பாய் கடை சந்திப்பில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் சாலைகளை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

உரிய ஆவணங்கள் இல்லாமல் உள்ள கடைகள் மற்றும் வீடுகளை காலி செய்ய ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பியதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற இயந்திரங்களுடன் வந்த போலீசாருடன் கட்டட உரிமையாளர்கள் வாக்குவா த்தில் ஈடுபட்டனர்.

இதனால் அவர்களை குண்டுகட்டாக போலீசார் தூக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்பு கடைகள் இடிக்கப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்