ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் வர 17ஆம் தேதி தொடங்க இருக்க, WTC ஃபைனல், இங்கிலாந்து vs மேற்கிந்திய தீவுகள் தொடர் காரணமா பல வெளிநாடு பிளேயர்ஸ் ஐபிஎல்ல பங்கேற்பதுல சிக்கல் எழுந்திருக்கு.
இப்படி இருக்க, ஐபிஎல் அணிகள் தற்காலிகமா மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்ய அனுமதி வழங்கியிருக்குறதா தகவல் வெளியாகியிருக்கு.
ஆனா, அப்படி ஒப்பந்தம் செஞ்சாலும் அடுத்த சீசனுக்கு தக்கவைக்க முடியாதுனு கூறப்படுது.
இருந்தாலும், ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்படுவதற்கு முன்னாடி REPLACEMENT பிளேயரா வந்தவங்கள தக்கவைப்பதுல எந்த சிக்கல் இல்லைனும் தகவல் வெளியாகியிருக்கு.
இதனால சிஎஸ்கேவுல சூப்பரா விளையாடுற டெவால்டு பிரவீஸ், ஆயுஷ் மாத்ரே, உர்வில் படேல்-அ சிஎஸ்கே தக்கவைக்க வாய்ப்பு வந்துருக்கு.
இப்படி இருக்க டெல்லி அணி, மெக்கர்க் பதிலா வங்கதேசத்தை சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் முஷ்தபிசுர் ரஹ்மானை ஒப்பந்தம் செஞ்சிருக்கு.
WTC ஃபைனல்ல விளையாடுற தென் ஆப்பிரிக்கா பிளேயர்ஸ் 27ஆம் தேதிக்குள்ள நாடு திரும்பனும்னு அந்நாட்டு BOARD அறிவிச்சிருந்த நிலையில், அவங்ககிட்ட ஐபிஎல் நிர்வாகம் சார்பில் ஆலோசனை நடத்திட்டு வரதா தகவல் வெளியாகியிருக்கு.