4வது டி20 - தொடரை கைப்பற்றுமா இந்தியா? | England | India

Update: 2025-01-31 02:52 GMT

இந்தியா - இங்கிலாந்து இடையேயான நான்காவது டி20 கிரிக்கெட் போட்டி இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. நடப்பு தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி, மூன்றாவது போட்டியில் தோல்வியை தழுவியது. இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில், 4வது போட்டி புனேவில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. காயத்தில் இருந்து மீண்டுள்ள ரிங்கு சிங் (RINKU SINGH) அணிக்கு திரும்புவார் என கூறப்பட்டுள்ளது. புனே மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் இரு அணிகளும் ரன்வேட்டையில் ஈடுபட வாய்ப்புள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்