ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம்பிடித்தார் தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனியை ஹால் ஆஃப் பேமில் (hall of fame)இணைத்து ஐசிசி கவுரவித்துள்ளது......
மகேந்திரசிங் தோனி.... சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பல மாயங்களை நிகழ்த்திய மந்திரக்காரர்.... சத்தமின்றி ஒரு சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பிய சாகசக்காரர்....
50 ஓவர் உலகக்கோப்பை, 20 ஓவர் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என மூன்று வித ஐசிசி கோப்பைகளையும் முத்தமிட்ட ஒரே கேப்டன்,,, தோனி....
நவீன கிரிக்கெட்டின் தலைசிறந்த ஃபினிஷர் சந்தேகமே இல்லாமல் தோனிதான்... அழுத்தத்தை திறம்பட கையாண்டு இந்தியாவை பல முறை கரைசேர்த்து தனித்துவமான கேப்டனாக தோனி மிளிர்ந்து இருக்கிறார்.
கேப்டன், விக்கெட் கீப்பர், ஃபினிஷர் என மூன்றிலும் தோனி தலைசிறந்தவராகத் திகழ்ந்தார்.... ரசிகர்களின் உணர்வில் கலந்த தோனி.... தோனி... கோஷம் கடல் கடந்து, கண்டங்கள் கடந்து மைதானங்களை அதிரச் செய்திருக்கின்றன.
538 சர்வதேசப் போட்டிகள்.... 17 ஆயிரத்து 266 ரன்கள்..., கீப்பராக 829 டிஸ்மிஸல்கள் என வியக்க வைக்கும் கெரியருடன் கடந்த 2019ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து தோனி விடைபெற்றார். ரன்-அவுட்டில் தொடங்கிய அவரது பயணம்,, இதயங்களை நொறுக்கிய ரன்-அவுட்டில்தான் முடிவு கண்டது...
ஓய்வு பெற்று 5 ஆண்டுகளுக்கு மேலானாலும் ரசிகர்களின் நினைவுகளில் நீக்கமற நிறைந்து இருக்கும் தோனியை, ஹால் ஆஃப் ஃபேம் hall of fame பட்டியலில் ஐசிசி தற்போது சேர்த்து இருக்கிறது.
ஜாம்பவான்களுக்கு கிடைத்த அதே கவுரவம் தனக்கும் கிடைத்ததை நினைத்து வாழ்நாள் முழுவதும் அகம் மகிழ்வேன் என தோனி நெகிழ்ந்து இருக்கிறார்...
தோனி ஒரு முற்று பெறாத சகாப்தம்... அந்த சகாப்தத்திற்கு மற்றுமொரு மகுடம் சூட்டி அழகுபார்த்துள்ள ஐசிசி, தோனி ரசிகர்களை மீண்டும் கொண்டாட்ட நிலைக்கும் கொண்டு சென்றுள்ளது.