2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து காயத்தால் விலகிய பும்ராவிற்கு பதிலாக, இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா அணியில் நியமிக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அதேபோல, பிரதான அணியில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த ஜெய்ஸ்வால்-க்கு பதிலாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டு உள்ளதாகவும், ஜெய்ஸ்வால், சிராஜ், ஷிவம் துபே ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக அணியினருடன் துபாய்க்கு பயணிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.