மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு குருபூஜையில் கலந்து கொள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனை தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் நேரில் சென்று கொடுத்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எல்.கே.சுதீஷ், அரசியல் சார்ந்து எதையும் பேசவில்லை என்றும் தெரிவித்துக்கொண்டார்.