தற்கொலை முயற்சி - த.வெ.க அஜிதாவின் உடல்நிலை? - மருத்துவமனை விளக்கம்

x

தவெகவில் பதவி வழங்கவில்லை எனக்கூறி தற்கொலைக்கு முயன்ற தூத்துக்குடி பெண் நிர்வாகி அஜிதா விரைவில் குணமடைவார் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10க்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை ஒரே நேரத்தில் சாப்பிட்டதால் மயக்க நிலையில் இருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. கணவர் பயன்படுத்தும் தூக்கமாத்திரையை அஜிதா சாப்பிட்டதும் தெரியவந்துள்ளது.

பெரிய பாதிப்பு ஒன்றும் இல்லை. தூக்க மாத்திரைகளை ஒன்றாக சாப்பிட்டதால் மயக்க நிலையில் உள்ளார். விரைவில் குணமடைவார் என்று மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.!*

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் அஜிதா ஆக்னல். தமிழக வெற்றிக்கழக நிர்வாகி. இவர் தமிழக வெற்றி கழகத்தில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காத காரணத்தினால் நேற்று முன்தினம் சென்னை பனையூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜயின் காரை முற்றுகையிட்டு அஜிதா மற்றும் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த அஜிதா ஆக்னல் மூன்று நாட்களும் உணவு அருந்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் திமுக கைக்கூலி என அஜிதா மற்றும் அவரது ஆதரவாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய சம்பவத்தாலும் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வீட்டில் 15 தூக்க மாத்திரைகளை போட்டு தற்கொலைக்கு முயன்ற அவரை அவரது கணவர் உள்ளிட்டோர் உடனடியாக அருகே உள்ள ஒர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அஜிதா ஆக்னல் தூத்துக்குடி தமிழ் சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மருத்துவமனை தரப்பில் கூறப்படுவதாவது, அஜிதா ஆக்னலுக்கு தற்போது எக்ஸ்ரே போன்ற பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தூக்க மாத்திரைகளின் செயல்பாட்டை குறைக்கும் விதமான மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளது. பெரிய பாதிப்பு ஒன்றும் இல்லை. 10க்கும் மேற்பட்ட மாத்திரைகளை ஒன்றாக சாப்பிட்டதால் மயக்க நிலையில் உள்ளார். வேறு எந்த பிரச்சனையும் இல்லை.. விரைவில் குணமடைவார் என்று மருத்துவமனை தரப்பில் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்..

மேலும், அஜிதாவின் கணவர் ஆக்னல் என்பவர் தூக்க மாத்திரைகளை உட்கொள்வாராம்.. ஆகவே வீட்டில்

இருந்த தூக்க மாத்திரைகளை சாப்பிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்