தமிழக வெற்றிக் கழகத்தில், ஒருவருக்கு ஒரு பதவி தான் என்பதில் கட்சித் தலைமை உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில அளவிலான பதவிகளுக்கு நிர்வாகிகளை தேர்வு செய்து, பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாவட்ட செயலாளராக விரும்புவோருக்கு மாநில பொறுப்பு கிடையாது என, கட்சித் தலைமை திட்டவட்டமாக கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், எந்த பொறுப்பாக இருந்தாலும் ஒருவருக்கு ஒரு பதவி தான் என, நிர்வாகிகளிடம் தெளிவுபடுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது