அண்ணாமலை கொளுத்தி போட்ட புதிய அரசியல் வெடியும் களத்தை அதிரவிட்ட பனையூர் பாலிட்டிக்ஸும்

Update: 2025-02-11 02:44 GMT

இலவச வேட்டி, சேலை திட்டத்தில் ஊழல் செய்துள்ள அமைச்சர் காந்தி உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர் காந்தியின் ஊழல் குறித்து புகார் கொடுத்தும், ஊழல் தடுப்பு கண்காணிப்பு இயக்குநகரம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். அமைச்சர் காந்தி இனியும் பதவியில் நீடிக்கக் கூடாது என்றும், அவரை முதல்வர் ஸ்டாலின் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். வரும் 2026-இல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும்போது, காந்தி சிறைக்குச் செல்வார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்