ADMK Murugan Manadu | "பெரியார் அண்ணாவை விமர்சித்து வீடியோ" - அதிமுக கண்டனம்

Update: 2025-06-24 03:07 GMT

"பெரியார் அண்ணாவை விமர்சித்து வீடியோ" - அதிமுக கண்டனம்

மதுரை முருகர் பக்தர்கள் மாநாட்டில், பெரியார், அண்ணா ஆகியோர் பற்றி வெளியிடப்பட்ட வீடியோ என்பது துளியும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அதிமுக சார்பில் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

உண்மையில் அப்படிப்பட்ட வீடியோ வெளியிட்டதாக தங்கள் கவனத்திற்கு வரவோ, தாங்கள் யாரும் பார்க்கவோ இல்லை என்றும், மாநாடு முடித்து வந்த பிறகே இதுபற்றிய செய்திகள் வாயிலாக தான் அறிந்து கொண்டோம் என்றும் அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரியாரையே இழிவுபடுத்திய கருணாநிதியின் திமுகவிற்கு அதிமுக-வுக்கு பாடமெடுக்க எந்த அருகதையும் இல்லை என்று கூறியுள்ள அதிமுக,

மதுரை முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையோ, உறுதிமொழிகளையோ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த யாரும் ஏற்கவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்ளவதாக கூறியுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்