Bjp | Nainar Nagendran | அண்ணாவை விமர்சித்து வீடியோ - நயினார் நாகேந்திரன் சொன்ன பதில்

Update: 2025-06-24 03:02 GMT

மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில், அண்ணாவை விமர்சித்து வீடியோ வெளியிடப்பட்டது குறித்து, வீடியோவை பார்த்து விட்டு பதில் அளிப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில், அண்ணா, பெரியார் உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்களை விமர்சித்து வீடியோ வெளியிடப்பட்டது. அதற்கு அதிமுகவினர் அதிருப்தி தெரிவித்த நிலையில், இதுகுறித்து, நயினார் நாகேந்திரனிடம் கேட்டபோது, வீடியோவை பார்த்து விட்டு பதில் அளிப்பதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்