பாமக கட்சி அமைப்பு விதிகளின் படி, முழு அதிகாரமும் ராமதாசுக்கே உள்ளதாக, பாமக அரசியல் குழு தலைவர் பேராசிரியர் தீரன் தெரிவித்துள்ளார். திண்டிவனம் தைலாபுரத்தில், பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்த பேராசிரியர் தீரன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கட்சி அமைப்பு விதிகளை வகுத்ததில் தானும் ஒருவர் என தெரிவித்த அவர், அதில் கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கே முழு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.