முதல்வர் தலைமையில் பல துறைகளில் தமிழகம் முதலிடம் பெற்று சாதனை

Update: 2025-05-12 01:53 GMT

CM Stalin | Tamil Nadu | முதல்வர் தலைமையில் பல துறைகளில் தமிழகம் முதலிடம் பெற்று சாதனை

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஏற்றுமதி, வேலைவாய்ப்பு, உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழ்நாடு முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

பொருளாதார வளர்ச்சியில் 9 புள்ளி ஆறு ஒன்பது சதவீத வளர்ச்சி, உயர்கல்வி மாணவர் சேர்க்கை, சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, தோல் பொருட்கள் மற்றும் ஜவுளித் துணிகள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, நான் முதல்வன், கலைஞர் கனவு இல்லம் முதலான புரட்சிகரமான திட்டங்களால் தமிழ்நாடு அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டு காலமும் அமைதி நிலவுவது, மாநிலத்தில் நிலையான வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பெண் காவல் அதிகாரிகளைக் கொண்டுள்ளதில் முதலிடம் பெற்றுள்ளதாகவும், அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் எண்ணிக்கையில் முதலிடம் வகிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வறுமை ஒழிப்பு, அதிக எண்ணிக்கையில் தொழிற்சாலைகள், அதிக தொழிலாளர்களை கொண்டுள்ளதில் முதலிடம் வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய திறன் மையங்களில் மும்பை, புனே, ஐதராபாத், பெங்களூரூ முதலான நகரங்களைவிட சென்னை 24.5 சதவிகித வளர்ச்சியுடன் 94 ஆயிரத்து121 திறன் மையங்கள் கொண்டு தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்