பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மீட்டெடுக்கும் என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சிவகங்கை அரண்மனை வாயிலில் பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மூத்தத் தலைவர் ஹெச்.ராஜா பங்கேற்றார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா, தமிழகத்தில் இருக்கும் தேசபக்தி இல்லாத சில அரசியல் கட்சியினர் பாகிஸ்தானுடன் போர் வேண்டாம் என்று கூறுவதாக தெரிவித்தார்.