TVK | தவெக தொண்டர்களின் நாடி நரம்புகளை முறுக்கேற்றி களத்தில் இறக்கிவிடும் என்.ஆனந்த்
தவெகவிற்கு வரும் 100 நாட்கள் மிக முக்கியமானது - ஆனந்த்
தவெகவிற்கு அடுத்து வரும் 100 நாட்கள் மிகவும் முக்கியமான காலமாக இருப்பதால், ஓய்வில்லாமல் உழைக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு தவெக பொதுச்செயலாளர் ஆனந்த அறிவுறுத்தியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. அப்போது, விடுபட்ட வாக்காளர்களை சேர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.