அரசின் சாதனைகளை விளக்கி பேரணி - திரளான திமுகவினர் பங்கேற்பு

Update: 2025-04-29 14:33 GMT

தமிழக அரசின் நான்கு ஆண்டு சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரம் வழங்கும் பெருந்திரள் மக்கள் பிரசாரப் பேரணி நெல்லை மாவட்டம் களக்காட்டில் நடைபெற்றது.

துண்டு பிரசுரம் வழங்கும் பெருந்திரள் மக்கள் பிரசாரத்தில் திமுக களக்காடு தெற்கு ஒன்றிய செயலாளரும் களக்காடு நகராட்சி துணை சேர்மேனுமான பி.சி.ராஜன், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். பிரசாரத்தின்போது பொதுமக்களிடம் தமிழக அரசின் நான்கு ஆண்டு சாதனைகளை விளக்கும் வகையிலான துண்டு பிரசுரங்களை திமுக தொண்டர்கள் வழங்கினர். மகளிர் உரிமைத் தொகை திட்டம், மகளிருக்கான விடியல் பயணத் திட்டம், பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பொதுமக்களிடம் திமுக ஒன்றிய செயலாளர் பி.சி.ராஜன் எடுத்துரைத்தார். அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் குறித்தும் பொதுமக்களிடம் விரிவாக துண்டு பிரசுரங்கள் மூலம் பி.சி.ராஜன் எடுத்துக் கூறினார். சாதனை விளக்க பெருந்திரள் பேரணி,, களக்காடு அண்ணா சிலை முன்பு தொடங்கி மெயின்ரோடு, மணிக்கூண்டு, காந்தி வீதி மற்றும் பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக சென்று களக்காடு பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்