"பிரதமரை போல தமிழுக்கு பெருமை சேர்த்தவர் யாருமில்லை.." - தமிழில் பேசி புகழ்ந்து தள்ளிய ஆளுநர்
"பிரதமர் மோடியைப் போல தமிழுக்கு பெருமை சேர்த்தவர் யாருமில்லை"
பிரதமர் மோடியைப் போல தமிழுக்கு பெருமை சேர்த்தவர் யாருமில்லை என்று ஆளுநர் ஆர்.என். ரவி கருத்து தெரிவித்தார். ராமேஸ்வரத்தில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி முழுவதும் தமிழிலேயே உரையாற்றினார். அப்போது, குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தமிழ் மக்களின் இதயதுடிப்பை உணர்ந்து, இரவு பகலாக மாநில முன்னேற்றத்திற்காக உழைப்பதாக புகழ்ந்தார்.