``என்ன நெஞ்ச நிமித்திட்டு வர்ற.. கடையே காலியாகிடும்..’’ - வடமாநிலத்தவரை மிரட்டிய கட்சி பிரமுகர்
ஸ்ரீபெரும்புதூரில் வடமாநில கடைக்காரரை மிரட்டிய திமுக நிர்வாகி
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் வடமாநில மளிகை கடைக்காரர் மற்றும் அவரது மகனை திமுக நகர துணை செயலாளர் மிரட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.
ஸ்ரீபெரும்புதூர் சிவன்தாங்கல் பகுதியில் பீகாரை சேர்ந்த ஷ்யாம் பிகாரி கடந்த 13 ஆண்டுகளாக மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 28ஆம் தேதி இவரது கடைக்கு வந்த திமுக நகர துணை செயலாளர் ஆறுமுகம், பொருட்களை வாங்கிவிட்டு ஐநூறு ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். 500 ரூபாய்க்கு சில்லறை இல்லை என ஷ்யாம்பிகாரி கூறவே, இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து வடமாநில மளிகை கடைக்காரர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.