MGR சிலைக்கு மரியாதை செலுத்திய சைதை துரைசாமி

Update: 2025-01-17 09:45 GMT

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி மரியாதை செலுத்தினார். தியாகராய நகர் ஆற்காடு சாலைப் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் முன்னாள் மேயர் சைதை துரைசாமி மரியாதை செலுத்தினார். அவருடன் இணைந்து அவரது ஆதரவாளர்களும் எம்.ஜி.ஆர் சிலைக்கு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மக்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை சைதை துரைசாமி வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்