பூரணசந்திரன் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் சொன்ன எல்.முருகன்

Update: 2025-12-31 02:56 GMT

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றக்கோரி பூரணசந்திரன் உயிரிழந்ததற்கு திமுக அரசே காரணம் என மத்திய இணையமைச்சர் எல். முருகன் குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில் உள்ள நரிமேட்டில் உள்ள பூரணசந்திரன் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய பின்னர் அவர் இதனை தெரிவித்தார். பூரண சந்திரனுக்கு அஞ்சலி செலுத்துவது என்பது கார்த்திகை தீபம் ஏற்றுவது தான் ஒரே வழி என்றும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்