"தமிழ்நாட்டில் கஞ்சா இல்லை என முழு பூசணியை சோற்றில் மறைக்கிறார்கள்"
தமிழகத்தில் கஞ்சா இல்லை என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரசாரப் பயணத்தின் போது பேசிய அவர், தமிழகத்திற்குள் கஞ்சா கொண்டு வரப்படுவதைத் தடுப்பதற்கு திமுக அரசு எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார்.