PMK | Politics | ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் - பரபரப்பு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் ராமதாஸ் ஆதரவாளர்களுக்கும், அன்புமணி ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. சேலத்தில் பாமக நிறுவனர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், பாமக செயற்குழு உறுப்பினர் சுகந்தன், அன்புமணிக்கு எதிராக கருத்துகளை தெரிவித்திருந்தார். இதற்கு எதிராக, திண்டிவனத்தில் அன்புமணி ஆதரவாளர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அன்புமணி தரப்பில் மயிலம் எம்.எல்.ஏ. சிவக்குமார் உள்ளிட்டோரும், ராமதாஸ் தரப்பில் மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்டோரும் மாறி மாறி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர். அப்போது இரு தரப்புக்கும் மீண்டும் மோதல் போக்கு ஏற்பட்டது. பின்னர் போலீசார் இரு தரப்பினரையும் அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.